உலகின் ஒரு மிகப்பெரிய பெட்ரோலிய ஆராய்ச்சி மையத்தினை நிறுவுவதற்கானப் பணிகளைத் தொடங்க குவைத் அரசுத் திட்டமிட்டுள்ளது.
குவைத் நகரின் தெற்கே உள்ள அல்-அஹ்மதி என்னுமிடத்தில் கட்டப்படும் இந்த மையமானது 28 ஆய்வகங்களைக் கொண்டிருக்கும்.
கனரக கச்சா எரிபொருள் மற்றும் அதனோடு தொடர்புடைய பிற வாயுக்களைப் பிரித்தெடுப்பது உட்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு தொழில்துறையால் பயன்படுத்தக் கூடிய மேம்படுத்தப் பட்ட உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நுட்பங்களை உருவாக்க இது முயல்கிறது.