TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய மின்சார மூலம்

October 13 , 2025 14 hrs 0 min 30 0
  • 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியானது முதல் முறையாக நிலக்கரியை விஞ்சி, உலகின் முன்னணி மின்சார உற்பத்திக்கான மூலமாக மாறியது.
  • சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம் ஆனது, நிலக்கரி மற்றும் எரிவாயு பயன்பாட்டில் சிறிது சரிவை ஏற்படுத்தி, உலகளாவிய மின்சாரத் தேவை வளர்ச்சியில் 100 சதவீதத்தினைப் பூர்த்தி செய்தது.
  • உலகின் பிற பகுதிகளை விட அதிக சூரிய மற்றும் காற்றாலை உற்பத்தியை உருவாக்கி, அதன் புதைபடிவ எரிபொருள் உற்பத்தியை 2% குறைத்ததுடன், சீனா தூய்மையான எரிசக்தி விரிவாக்கத்தில் முன்னிலை வகித்தது.
  • இந்தியாவும் குறிப்பிடத்தக்க சூரிய மற்றும் காற்றாலை உற்பத்தியை மேற்கொண்டு, மெதுவான தேவை வளர்ச்சியை ஈடுசெய்து, நிலக்கரி மற்றும் எரிவாயுப் பயன்பாட்டைக் குறைத்தது.
  • இதற்கு நேர்மாறாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பலவீனமான தூய்மையான எரிசக்தி வளர்ச்சி மற்றும் மோசமான காற்று மற்றும் நீர் உற்பத்தி காரணமாக புதைபடிவ எரிபொருள்களை சார்ந்திருக்கும் நிலையை அதிகரித்தன.
  • கொள்கை மாற்றங்கள் காரணமாக சர்வதேச எரிசக்தி முகமையானது (IEA) 2030 ஆம் ஆண்டிற்கான அதன் அமெரிக்க புதுப்பிக்கத்தக்க திறன் கணிப்பை 500 GW திறனிலிருந்து 250 GW ஆக பாதியாகக் குறைத்தது.
  • 1975 ஆம் ஆண்டு முதல் சூரிய சக்தி விலைகள் 99.9% குறைந்துள்ளன என்பதோடு இது வளர்ந்து வரும் நாடுகளில், மிகவும் குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் விரைவான சூரிய சக்தி ஏற்பிற்கு வழி வகுத்தது.
  • 2024 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் நாடானது சூரிய சக்தி இறக்குமதியை இரட்டிப்பாக்கியது.
  • சூரிய சக்தி திறனில் நைஜீரியா எகிப்தை முந்தியது என்பதோடு மேலும் சாம்பியா மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகளும் அதிவேக வளர்ச்சியைக் கண்டன.
  • விரைவான சூரிய சக்தி விரிவாக்கம் ஆனது புதிய சவால்களை ஏற்படுத்துகிறது, அதாவது ஆப்கானிஸ்தானில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் சூரிய சக்தியில் இயங்கும் நீரேற்றிகள் பயன்பாடானது நிலத்தடி நீர் மட்டங்களைக் குறைக்கின்றன.
  • 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 20 பில்லியன் டாலரை எட்டிய சீனா, மின்சார வாகனங்கள் மற்றும் மின் கலன்கள் துறையில் முன்னிலை வகிப்பதுடன் தூய்மையான தொழில்நுட்ப ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் உலகளாவியப் பங்குதாரராக திகழ்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்