உலகின் மிகப்பெரிய விரைவான பண வழங்கீட்டு அமைப்பு - UPI
December 12 , 2025 15 hrs 0 min 26 0
இந்தியாவின் ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகம் (UPI) ஆனது, பரிவர்த்தனை அளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய சில்லறை விற்பனைக்கான விரைவான பண வழங்கீட்டு அமைப்பாக சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ACI வேர்ல்ட் வைடு அமைப்பின் 2024 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, உலகளாவிய நிகழ்நேரப் பண பரிவர்த்தனைகளில் UPI 49% பங்கினைக் கொண்டுள்ளது.
அரசாங்கம், RBI மற்றும் இந்தியத் தேசியக் கொடுப்பனவு கழகம் (NPCI) ஆகியவை BHIM-UPI பரிவர்த்தனைகள் மற்றும் பண வழங்கீட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (PIDF) ஆகியவற்றிற்கான ஊக்கத் தொகைகள் மூலம் டிஜிட்டல் பண வழங்கீடுகளை ஊக்குவிக்கின்றன.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி, மூன்று முதல் ஆறாம் நிலை மையங்களில் சுமார் 5.45 கோடி டிஜிட்டல்சார் முனையங்கள் நிறுவப்பட்டன என்ற நிலையில்மேலும் 56.86 கோடி QR குறியீடுகள் 6.5 கோடி வணிகர்களை அடைந்தன.