2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் வெர்சாய்லின் உலகின் மிக அழகான விமான நிலையங்களின் பட்டியலில் இந்தியாவின் நவி மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் குவாஹாட்டியின் லோகப்ரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம் (LGBIA) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பிரிக்ஸ் வெர்சாய்ல் என்பது 2015 ஆம் ஆண்டு முதல் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சர்வதேச கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு விருதாகும்.
நவி மும்பை சர்வதேச விமான நிலையமானது தாமரை மலரால் ஈர்க்கப்பட்ட அதன் கட்டிடக்கலைக்காக அங்கீகரிக்கப்பட்டது.
வடகிழக்கு இந்தியாவின் பல்லுயிர்த் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையிலான மூங்கில் ஆர்க்கிட் தாவரத்தால் ஈர்க்கப்பட்ட அதன் வடிவமைப்பிற்காக குவாஹாட்டி விமான நிலைய முனையம் 2 அங்கீகரிக்கப்பட்டது.
பிரிக்ஸ் வெர்சாய்ல் 2026ன் குறுகிய பட்டியலில் இடம் பெற்றுள்ள பிற விமான நிலையங்கள் குவாங்சோ, ஃபிராங்ஃபர்ட் ஆம் மெயின், கண்டல் ஸ்டுங், பிட்ஸ்பர்க் மற்றும் சான் டியாகோ ஆகியவையாகும்.