உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் - சார்லஸ் கோஸ்டே
November 9 , 2025 72 days 155 0
பிரான்சின் மிக வயதான ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற சார்லஸ் கோஸ்டே காலம் ஆனார்.
இவர் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடைபெற்ற முதல் விளையாட்டுப் போட்டியான 1948 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் குழு சைக்கிள் பந்தயத்தில் தங்கம் வென்றார்.
1949 ஆம் ஆண்டில், இத்தாலிய சைக்கிள் ஓட்டும் வீரர் ஃபாஸ்டோ கோப்பியை தோற்கடித்து கிராண்ட் பிரிக்ஸ் டெஸ் நேஷன்ஸ் பட்டத்தினை வென்றார்.
அவரது 99வது வயதில், 2024 ஆம் ஆண்டு பாரிசு விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒலிம்பிக் ஜோதியை அவர் ஏந்திச் சென்றார்.