கடல்சார் காற்றாலை மின்சாரத்தை ஆதரிப்பதற்காக, பெல்ஜியம் அதன் கடற்கரையிலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் உள்ள வட கடலில் உலகின் முதல் செயற்கை ஆற்றல் தீவைக் கட்டி வருகிறது.
பிரின்சஸ் எலிசபெத் தீவானது, 3.5 ஜிகாவாட் (GW) கடல்சார் காற்றாலைத் திறனைக் கொண்டிருக்கத் திட்டமிடப்பட்டுள்ள பிரின்சஸ் எலிசபெத் மண்டலத்திற்கான ஆற்றல் மையமாகச் செயல்படும்.
இது கடல்சார் காற்றாலைகளிலிருந்து மின்சாரத்தைச் சேகரித்து, கடலடி வடங்கள் மூலம் பெல்ஜியத்தின் பிரதான நிலப்பரப்பிற்கு கடத்தும்.
இந்தத் தீவானது பிரிட்டன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுடனான இணைப்புகளையும் கொண்டிருக்கும். இது வட கடலின் கடல்சார் காற்றாலைப் பண்ணைகளை இணைக்கும்.
இதன் கட்டுமானப் பணிகள் 2027 ஆம் ஆண்டில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இது 2030 ஆம் ஆண்டிற்குள் முழுமையாகச் செயல்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.