உலகின் முதல் இரட்டை-கோபுர சூரிய-வெப்ப மின் உற்பத்தி ஆலை
October 14 , 2025 14 hrs 0 min 31 0
சீன நாடானது, கோபி பாலைவனத்தில் உலகின் முதல் இரட்டை-கோபுர சூரிய-வெப்ப மின் உற்பத்தி நிலையத்தை தொடங்கியுள்ளது.
இது இரண்டு 200 மீட்டர் கோபுரங்களில் சூரிய ஒளியைக் குவிப்பதற்காக சூரிய திசை நோக்குக் கருவி/ஹீலியோஸ்டாட்கள் எனப்படும் 27,000 கண்ணாடிகளைப் பயன்படுத்துகிறது.
இந்தக் கோபுரங்கள் சுழலி/டர்பைன்களை இயக்கும் நீராவியை உற்பத்தி செய்வதற்கு 570 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை உருவாக்குகின்றன.
இந்த அமைப்பு ஆனது, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அல்லது மேகமூட்டமான வானிலையிலும் கூட மின்சார உற்பத்தியை செயல்படுத்துகிறது.
இரட்டை-கோபுர வடிவமைப்பு ஆனது ஒற்றை-கோபுர ஆலைகளுடன் ஒப்பிடும் போது அதன் செயல்திறனை சுமார் 25 சதவீதம் அதிகரிக்கிறது.