உலகின் முதல் மின்சார வாகனங்களின் மின்கலங்களுக்கான கடவுச்சீட்டு
June 10 , 2024 449 days 331 0
வோல்வோ கார்ஸ் நிறுவனம் ஆனது, அதன் முதன்மையான EX90 SUV வாகனத்திற்காக உலகிலேயே முதல் முறையாக மின்சார வாகனங்களின் மின்கலங்களுக்கான கடவுச் சீட்டினை அறிமுகப்படுத்துகிறது.
2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் மின்சார வாகனங்களுக்கு (EVs) மின்கலக் கடவுச் சீட்டு பெறுவது கட்டாயமாக்கப்பட உள்ளது.
முக்கியப் பொருட்களின் தோற்று இடம், அவற்றின் கார்பன் தடம் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பாகங்கள் உள்ளிட்ட மின்கலங்களின் கலப்பு குறித்தத் தகவல்களை இது கொண்டிருக்கும்.