TNPSC Thervupettagam

உலகின் 3வது பெரிய பொருளாதாரம்

September 9 , 2022 970 days 496 0
  • இந்திய நாடானது 2029 ஆம் ஆண்டிற்குள் உலகின் மூன்றாவதுப் பெரியப் பொருளாதாரமாக மாற உள்ளது.
  • தற்போதைய வளர்ச்சி விகிதத்தில், இந்தியா 2027 ஆம் ஆண்டில் ஜெர்மனியையும், 2029 ஆம் ஆண்டில் ஜப்பானையும் மிஞ்சும் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை கூறியுள்ளது.
  • உலக அளவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு தற்போது 3.5 சதவீதமாக உள்ளது.
  • 2027 ஆம் ஆண்டில் இந்தியாவின் பங்கு, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜெர்மனியின் தற்போதையப் பங்கான 4 சதவீதத்தை விஞ்ச வாய்ப்புள்ளது.
  • இருப்பினும், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில், இந்தியா இன்னும் உலகின் பெரும்பாலான பொருளாதாரங்களை விட பின்தங்கியே உள்ளது.
  • உலக வங்கியின் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2,277 டாலராக இருந்த அதே சமயம் ஐக்கிய ராஜ்ஜியத்தின் தனிநபர் வருமானம் 47,334 டாலராக இருந்தது.
  • சீனாவின் தனிநபர் வருமானம் ஆனது, 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் 12,556 டாலர் என்ற மதிப்பை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்