உலகிலேயே மிகக் கடுமையான புகைபிடித்தல் தடை சட்டங்கள்
January 20 , 2023 927 days 448 0
மெக்சிகோ அரசானது சமீபத்தில் உலகிலேயே மிகக் கடுமையான புகைபிடித்தல் தடை சட்டத்தினை விதித்துள்ளது.
இது தங்கும் விடுதிகள், கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு முழுமையான தடையை இச்சட்டம் அமல்படுத்துகிறது.
புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டினை ஊக்குவித்தல், விளம்பரம் செய்தல் மற்றும் அது சார்ந்த நிறுவனங்களுக்கு நிதியளித்தல் ஆகியவை மீது மொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மின்னணு சிகரெட் மற்றும் குட்கா ஆகியவற்றின் விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவையும் இந்தப் புதியக் கட்டுப்பாடுகளுக்கு உட்படும்.
இதனுடன், அயர்லாந்து, கிரீஸ், ஹங்கேரி மற்றும் மால்டா போன்ற நாடுகள் அடங்கிய மிகவும் கடுமையான சட்டங்களுடன் கூடிய, புகையிலை-இல்லாத சூழலைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் மெக்ஸிகோ இணைகிறது.