உலகில் நீண்ட நேரம் உழைப்பவர்கள் - மும்பை தொழிலாளர்கள்
June 13 , 2018 2755 days 944 0
UBS என்ற சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வருட அளவில் நீண்ட நேரம் பணிபுரியும் நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் நிதித் தலைநகரமான மும்பை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்த அறிக்கை, சராசரியாக ஒரு மும்பைவாசி வருடத்திற்கு7 மணி நேரம் வேலை செய்வதாக கூறுகின்றது. இந்தப் பட்டியலில் புதுதில்லி 4-வது இடத்திலும், பகோடா 5-வது இடத்திலும் உள்ளன.
கணக்கெடுப்பு செய்யப்பட்ட 73 நகரங்களில் வருட அளவில் பணிபுரியும் நேரத்தோடு தொடர்புடைய சம்பாதிக்கும் நிலைக்கான பட்டியலில் ஹனோய் (2691.4 மணி நேரம்) மற்றும் மெக்சிகோ (2622.1 மணி நேரம்) ஆகிய நகரங்களில் உள்ள தொழிலாளர்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளனர்.
பட்டியலில் 75-வது மற்றும் 76-வது இடங்களைப் பிடித்த ஐரோப்பிய நகரங்களான பாரீசும், ரோமும் முதல் 3 நகரங்களில் வேலை செய்பவர்களின் வருடாந்திர நேரத்தில் ஏறக்குறைய பாதியளவு நேரத்தை மட்டுமே கொண்டிருக்கின்றன.
இவ்வறிக்கை, ஜீரிச் நகரம் மிக அதிக செலவாகும் நகரமென்றும் கெய்ரோ மிக மலிவான நகரமென்றும் கூறுகின்றது.
மொத்த வருவாய் அளவுகளில் ஜெனீவா முதல் இடத்திலும், புதுதில்லி, மும்பை, கெய்ரோ ஆகிய மூன்று நகரங்கள் கடைசி இடங்களிலும் உள்ளன.
மக்களின் தனிநபர் வாங்கும் சக்தியைப் பொறுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் முதல் இடத்திலும், லாகோஸ் நகரம் கடைசி இடத்திலும் உள்ளன.