உலக அடையாளம் காண முடியாத பறக்கும் பொருட்கள் (UFO) தினம் – ஜூலை 02
July 4 , 2020 1865 days 665 0
முதலாவது உலக UFO (Unidentified Flying Objects) தினமானது 2001 ஆம் ஆண்டில் UFO ஆராய்ச்சியாளரான ஹக்தான் அக்டோகான் அவர்களால் அனுசரிக்கப் பட்டது.
UFO விஞ்ஞானிகளின் படி, 1947 ஆம் ஆண்டில் வேற்றுக் கிரகத்தினரைக் கொண்ட ஒரு பறக்கும் தட்டானது புதிய மெக்சிகோ நகருக்கு அருகில் ரோஸ்வெல்லில் தரை இறங்கியது.
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று, பெண்டகன் ஆனது “அடையாளம் தெரியாத வான்வெளிக் கூறுகளை” காண்பிக்கக் கூடிய “குறும்படங்களை” வெளியிட்டது.
அமெரிக்காவில் உள்ள பாதுகாப்புத் துறையானது இந்தக் காணொலிகள் 2004 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் அமெரிக்கக் கடற்படை விமானிகளால் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளது.
எனினும் நாசாவின்படி, எந்தவொரு விண்வெளி வீரரும் விண்வெளியில் UFOவைக் கண்டதில்லை.