1990 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான உலக உச்சி மாநாடு ஆனது அயோடின் குறைபாடு கோளாறுகளைத் தடுப்பதன் அவசியத்தை எடுத்துரைத்ததையடுத்து இத்தினம் முதன்முதலில் அங்கீகரிக்கப்பட்டது.
ஆரோக்கியமான தைராய்டு செயல்பாடு மற்றும் ஒட்டு மொத்த வளர்ச்சியைப் பராமரிக்க அயோடினின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
அயோடின் குறைபாடு குழந்தைகளில் முன் கழுத்துக் கழலை, ஹைப்போ தைராய்டிசம், மனநலக் குறைபாடு மற்றும் வளர்ச்சியில் தாமதங்களை ஏற்படுத்தும்.
உலகளவில் சுமார் 2 பில்லியன் மக்கள் போதுமான அயோடின் உட்கொள்ளாதலால் பாதிக்கப் படுகின்றனர் என்ற நிலையில்அயோடின் கலந்த உப்பின் பயன்பாடு இந்த கோளாறுகளைத் தடுக்க உதவுகிறது.