உலக அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) தினம் - 27 பிப்ரவரி
March 5 , 2018 2732 days 1361 0
உலக NGO தினம் பிப்ரவரி 27-ஆம் தேதி ஒவ்வோர் ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த தினம், பால்டிக் கடல் நாடுகளின் கழகத்தினுடைய 9-வது பால்டிக் கடல் கருத்துக் களத்தின் 12 உறுப்பினர் நாடுகளால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 2010-இல் அறிவிக்கப்பட்டது.
முதன் முதலில் 2014-ஆம் ஆண்டு ஐ.நா (EU-European Union) தலைவர்கள், சர்வதேச அமைப்புகளினால் இத்தினம் குறிக்கப்பட்டது. பின்னர் பின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் இது தொடங்கி வைக்கப்பட்டது.
NGO தினமானது, NGO துறையில் தீவிரமாக ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் NGO, பொது மற்றும் தனியார் துறைகள் மூன்றும் ஒன்றிணைந்து செயல்படுவதை ஊக்குவிக்கவும் கடைபிடிக்கப்படுகிறது.