அரபு மொழியின் முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1973 ஆம் ஆண்டில் அரபு மொழியானது ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப் பூர்வ மொழியாக சேர்க்கப் பட்டதை இந்த நாள் குறிக்கிறது.
இத்தினம் யுனெஸ்கோ அமைப்பினால் கொண்டாடப்படுகிறது.
அரபு மொழி, 27க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓர் அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது.
அரபு மொழி உலகளவில் 550 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் தாய்மொழி ஆக உள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான உலக அரபு மொழி தினத்திற்கான கருத்துரு, "Innovative Pathways for Arabic: Policies and Practices for a More Inclusive Linguistic Future" என்பதாகும்.