உலக அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் விழிப்புணர்வு தினம் - ஜூன் 19
June 21 , 2024 462 days 270 0
இது அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் மற்றும் நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய ஒரு பொதுவான அறிவையும் அதன் மீதான புரிதலையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, அரிவாள் வடிவ உயிரணு சோகை நோயை ஒரு பொது சுகாதாரப் பிரச்சனையாக அங்கீகரித்தது.
அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் என்பது ஹீமோகுளோபின் மரபணுவில் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படும் ஒரு மரபணு இரத்தக் கோளாறு ஆகும் என்ற நிலையில் இது அசாதாரண ஹீமோகுளோபின் S உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
இது இரத்த ஓட்டத்தைத் தடுக்கக் கூடிய கடினமான, பிறை வடிவ சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Hope Through Progress: Advancing Sickle Cell Care Globally" என்பதாகும்.