TNPSC Thervupettagam

உலக இடம்பெயர்வு அறிக்கை 2026

May 9 , 2026 16 hrs 0 min 26 0
  • சர்வதேச இடம்பெயர்வு அமைப்பானது (IOM), உலக இடம்பெயர்வு அறிக்கையின் 13-வது பதிப்பை (2026) வெளியிட்டது.
  • 2024 ஆம் ஆண்டில் 137 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான தொகையைப் பெற்று, வெளிநாடுகளில் இருந்து அதிக பணம் பெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியா 2010 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய வெளிநாட்டுப் பண வரவில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதுடன், 100 பில்லியன் டாலர் இலக்கைக் கடந்த ஒரே நாடாகவும் உள்ளது.
  • மெக்சிகோ 67.6 பில்லியன் டாலர்களுடன் 2024 ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • பிலிப்பைன்ஸ் (USD 40.3 பில்லியன்), பிரான்ஸ் (USD 38.8 பில்லியன்) மற்றும் பாகிஸ்தான் (USD 34.9 பில்லியன்) ஆகிய நாடுகள் 2024 ஆம் ஆண்டில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
  • அமெரிக்கா (USA) உலகிலேயே வெளிநாடுகளுக்கு அதிக பணம் அனுப்பும் நாடாகத் தொடர்ந்து நீடிக்கிறது; 2024 ஆம் ஆண்டில் அதன் மொத்தப் பணப் பரிமாற்றம் 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.
  • சவுதி அரேபியா 46 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகவும், அதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து சுமார் 40 பில்லியன் டாலர்களையும், ஜெர்மனி சுமார் 24 பில்லியன் டாலர்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்