இரத்த ஒட்டுண்ணி நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பால் இந்த நாள் குறிக்கப்படுகிறது.
இரத்த ஒட்டுண்ணி நோயானது ட்ரைபனோசோமா க்ரூஸி என்ற ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது; மேலும் இது முக்கியமாக ட்ரைடோமைன் பூச்சி கடித்தல் அல்லது அசுத்தமான உணவு மூலம் பரவுகிறது.
உலகளவில் சுமார் 8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 இறப்புகள் நிகழ்கின்றன.
தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதால், குறிப்பாக குழந்தைப் பேறு வயதில் உள்ள பெண்கள் முக்கியக் கவனத்தைப் பெறுகின்றனர்.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Women at the Heart: Protecting the Next Generation from Chagas Disease" என்பதாகும்.