TNPSC Thervupettagam

உலக இருதயம் குறித்த அறிக்கை 2025

May 23 , 2025 14 hrs 0 min 23 0
  • உலக இருதயக் கூட்டமைப்பு (WHF) ஆனது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • உலக இருதய குழாய்க் கோளாறுகள் தொடர்பான சுமார் 10 உயிரிழப்புகளில் 1 உயிர் இழப்பிற்கு தற்போது அதிக BMI காரணமாக உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், 878 மில்லியன் இளம் வயதினர் உடல் பருமனுடன் வாழ்ந்தனர், இது 1990 ஆம் ஆண்டில் 194 மில்லியனாக இருந்தது.
  • கடந்த 30 ஆண்டுகளில் உடல் பருமன் தொடர்பான இருதய நோயால் ஏற்படும் உயிர் இழப்பு இரு மடங்கிற்கும் அதிகமாகும்.
  • இந்தப் போக்குகள் தொடர்ந்தால், 25 வயதிற்கு மேற்பட்ட இளம் வயதினரில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பேர் 2050 ஆம் ஆண்டில் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பர்.
  • 2021 ஆம் ஆண்டில், 3.7 மில்லியன் உயிரிழப்புகள் அதிக BMI காரணமாக ஏற்பட்டவை ஆகும் என்பதோடு இதில் சுமார் 1.9 மில்லியன் இதய நாளம் சார்ந்த நோய் (CVD) உயிரிழப்புகளும் அடங்கும்.
  • பெண்கள் மத்தியில் பதிவான உலகளாவிய CVD உயிரிழப்புகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவை உடல் பருமனால் ஏற்படுகின்றன. ஆண்களில் இது 8.9% ஆக உள்ளது.
  • இந்தியாவில், 1990 முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் பெண்களிடையே உடல் பருமன் குறைந்தது ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.
  • 20 வயதிற்கு மேற்பட்ட இளம் பருவப் பெண்களில் 10% பேர், அதாவது நாட்டில் சுமார் 44 மில்லியன் பேர் உடல் பருமனுடன் வாழ்கின்றனர்.
  • ஒப்பீட்டளவில், ஆண்களிடையே நிலவும் உடல் பருமன் ஆனது, 1990 ஆம் ஆண்டு முதல் 4.9% அதிகரித்துள்ளது என்பதோடு இது தற்போது 26 மில்லியன் இந்திய ஆண்களை அல்லது இந்தியாவில் உள்ள ஆண்களில் 5% பேரைப் பாதிக்கிறது.
  • இந்தியாவில் உடல் பருமனான பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்