உலக உணவுப் பரிசு - வேளாண் உணவு துறையின் முன்னோடிகள்
November 7 , 2025 20 days 90 0
பத்மஸ்ரீ விருது பெற்றவரும் புகழ்பெற்ற இந்திய சமையல்காரருமான சஞ்சீவ் கபூர், உலக உணவு பரிசு அறக்கட்டளையால் 2025 ஆம் ஆண்டின் சிறந்த வேளாண் உணவுத் துறை முன்னோடிகளில் ஒருவராக கௌரவிக்கப்பட்டார்.
சமையல் துறை சார் புத்தாக்கங்களை நிலையான வேளாண்மை, ஊட்டச்சத்து ஆதரவு மற்றும் சமூக நலனுடன் இணைப்பதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக பள்ளிகள், விவசாயிகள் மற்றும் ஊட்டச்சத்து முயற்சிகளை இணைக்கும் நியூட்ரி பாத்ஷாலா எனும் திட்டத்தினை அவர் தொடங்கினார்.
கபூர், இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கு 2.5 மில்லியனுக்கும் அதிகமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்க உதவியுள்ளார்.
ஊட்டச்சத்துத் தரத்தை மேம்படுத்த இரும்புச்சத்து நிறைந்த கம்பு மற்றும் துத்தநாகம் நிறைந்த கோதுமை உள்ளிட்ட உயிரி ஊட்டங்கள் செறிவூட்டப்பட்டப் பயிர்களை அவர் ஊக்குவித்துள்ளார்.
1986 ஆம் ஆண்டு டாக்டர் நார்மன் போர்லாக் அவர்களால் நிறுவப்பட்ட உலக உணவுப் பரிசு அறக்கட்டளை ஆனது அமெரிக்காவின் அயோவாவில் உள்ள டெஸ் மொயினஸ் எனுமிடத்தில் தலைமையகத்தினைக் கொண்டுள்ளது.