அமெரிக்காவின் அயோவா மாநிலம் டெஸ் மொயினில் அக்டோபர் மாதம் 20 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்ற 2026 நார்மன் இ. போர்லாக் சர்வதேச உரையாடலில் தேசிய வேளாண் அறிவியல் கழகம் (NAAS) இந்தியாவின் விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வியைக் காட்சிப்படுத்தியது.
விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் இந்திய இளைஞர்களின் திறமையை அங்கீகரிக்கும் வகையில், அமீனா நஸ்ரின் ஏ.எஸ் US$500 ரொக்கப் பரிசோடு GYI விருதை வென்றார்.
வேளாண் ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் அறிவுப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்காக NAAS மற்றும் அமெரிக்காவின் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சபை (CAST) ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
சர்வதேசக் கண்காட்சியில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் (ICAR) வெளியீடுகள் மற்றும் இந்தியாவின் விவசாய ஆராய்ச்சியின் பங்கையும் NAAS முன்னிலைப்படுத்தியது.
2026 உரையாடலானது உலக உணவுப் பரிசு அறக்கட்டளையால் (WFPF) "Before Hunger Wins” என்ற கருத்துருவுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.