மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை புவி அறிவியல் மற்றும் சுகாதார & குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் அமைச்சரான டாக்டர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் காணொலி வாயிலாக புதுதில்லியில் உலக உயிரி இந்தியா-2021 என்பதின் 2வது பதிப்பைத் தொடங்கி வைத்தார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்தத் கருத்தரங்கானது உலக சமுதாயத்திற்கும் தேசிய அளவில் இந்தியாவிற்கும் தேசிய உயிரித் தொழில்நுட்பத் துறையின் வாய்ப்புகள் மற்றும் உறுதித் தன்மையை எடுத்துக் காட்ட இருக்கின்றது.
மூன்று நாட்கள் கால அளவுள்ள இந்த நிகழ்ச்சியானது டிஜிட்டல் தளம் வாயிலாக 2021 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றது.
இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “வாழ்க்கையை மாற்றுதல்” (Transforming lives) என்பதாகும். இதன் குறிச் சொல், “உயிரி அறிவியலிலிருந்து உயிரிப் பொருளாதாரம்” (Biosciences to Bio-economy) என்பதாகும்.