உலக ஊடகம் மற்றும் தகவல் குறித்த கல்வியறிவு வாரம் – அக்டோபர் 24 முதல் 31 வரை
October 30 , 2021 1426 days 459 0
ஐக்கிய நாடுகளின் உலக ஊடகம் மற்றும் தகவல் குறித்த கல்வியறிவு வாரமானது “அனைவருக்குமான ஊடக மற்றும் கல்வியறிவினை” நோக்கிய முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும் அதனைக் கொண்டாடவும் வேண்டி ஆண்டுதோறும் அனுசரிக்கப் படுகிறது.
2021 ஆம் ஆண்டானது 10வது உலக ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவு வாரத்தினையும் ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட முதலாவது உலக ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவு வாரத்தினையும் குறிக்கிறது.
இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புடன் இணைந்து தென் ஆப்பிரிக்க நாட்டினால் ஏற்பாடு செய்யப் படுகிறது.
இந்த ஆண்டிற்கான கருத்துரு, “பொதுமக்களின் நன்மைக்கான ஊடகம் மற்றும் தகவல் குறித்த கல்வியறிவு” என்பதாகும்.