எச்.ஐ.வி/எய்ட்ஸுக்கு எதிரான தொடர்ச்சியான பெரும் போராட்டத்தை முன்னிலைப் படுத்தவும், எச்.ஐ.வி தடுப்பூசி ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் ஒரு உலகளாவிய தளமாக இது செயல்படுகிறது.
1997 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதியன்று, அப்போதைய அமெரிக்க நாட்டு அதிபர் பில் கிளிண்டன், எச்.ஐ.வி தடுப்பூசியை உருவாக்குவதற்கான மிகப்பெரும் உலகளாவிய முன்னெடுப்பிற்கு அழைப்பு விடுத்தார்.
கிளின்டனின் இந்த உரையின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 1998 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதியன்று இந்தத் தினம் முதலில் கொண்டாடப்பட்டது.
உலகளவில் சுமார் 40 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி பாதிப்புடன் வாழ்கின்றனர் மற்றும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அளவு புதிய தொற்றுகள் பதிவாகின்றன.