எலும்புப் புரை நோய்/ஆஸ்டியோபோரோசிஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், ஆரம்பகால நோயறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சையை ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது முதன்முதலில் 1996 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஆணையத்துடன் இணைந்து ஐக்கியப் பேரரசின் தேசிய எலும்புப் புரை நோய் சங்கத்தால் அனுசரிக்கப்பட்டது.
உலகளவில், 50 வயதுடைய 3 பெண்களில் ஒருவரும், 5 ஆண்களில் ஒருவரும் ஆஸ்டியோபோரோடிக் எலும்பு முறிவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "It’s Unacceptable!" என்பதாகும்.