உலக ஒராங்குட்டான் தினம் 2025 - ஆகஸ்ட் 19
August 23 , 2025
16 hrs 0 min
16
- இந்த நாள் ஒராங்குட்டான்களின் வளங்காப்பு மற்றும் அவற்றின் இயற்கை வாழ்விடத்தை மையமாகக் கொண்டுள்ளது.
- ஒராங்குட்டான் என்ற சொல் மலேசியச் சொற்களான நபர் என்று பொருள்படும் "ஒராங்" மற்றும் காடு என்று பொருள்படும் "ஹுட்டான்" என்பதிலிருந்து வந்தது.
- அவை சிம்பான்சிகள், போனோபோஸ் மற்றும் கொரில்லாக்களுக்குப் பிறகு மனித இனத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஆசியாவில் காணப்படும் பெரிய குரங்குகள் ஆகும்.
- அவை மனித டிஎன்ஏ உடன் 97% டிஎன்ஏவைப் பகிர்ந்து கொள்கின்றன.
- சுமத்ரா (இந்தோனேசியா) மற்றும் போர்னியோ (இந்தோனேசியா, மலேசியா மற்றும் புருனே ஆகியவற்றினை உள்ளடக்கியது) தீவுகளில் மட்டுமே தற்போது காணப் படுகிறது.
- 3 வகையான ஒராங்குட்டான்கள் உள்ளன:
- போர்னியன் ஒராங்குட்டான் - மிகவும் அருகிய நிலையில் உள்ள இனம்.
- சுமத்ரன் ஒராங்குட்டான் - மிகவும் அருகிய நிலையில் உள்ள இனம்.
- தபனுலி ஒராங்குட்டான் - மிகவும் அருகிய நிலையில் உள்ள இனம்.
Post Views:
16