1987 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்பந்தமான மான்ட்ரியல் நெறிமுறையை நினைவு கூரும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதியன்று, வியன்னா உடன்படிக்கை மற்றும் மான்ட்ரியல் நெறிமுறை ஆகியவை ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் உலகளாவிய ஒப்புதலை அடைந்த முதல் ஒப்பந்தங்களாக மாறியது.
ஓசோன்-குறைப்பு பொருட்கள் (ODS) என குறிப்பிடப்படும் மனிதனால் உருவாக்கப் பட்ட சுமார் 100 இரசாயனங்களின் உற்பத்தி மற்றும் நுகர்வை இந்த நெறிமுறை ஒழுங்குபடுத்துகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "From science to global action" என்பதாகும்.