உலக ஓசோன் விழிப்புணர்வு தினம் 2026 - செப்டம்பர் 16
September 18 , 2026 3 days 60 0
ஓசோன் படலத்தைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஓசோன் படலமானது பூமியின் மேற்பரப்பை அடையும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா (UV) கதிர்வீச்சைக் குறைப்பதன் மூலம் பூமியைப் பாதுகாக்கிறது.
ஓசோனைப் பாதிக்கும் பொருட்களைக் குறைப்பதற்காக 1987 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்ட சர்வதேச ஒப்பந்தமான மாண்ட்ரீல் நெறிமுறையை இந்த நாள் நினைவு கூருகிறது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) 1994 ஆம் ஆண்டில் உலக ஓசோன் தினத்தை நிறுவியது, மேலும் இது முதன்முதலில் 1995 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
மாண்ட்ரீல் நெறிமுறைக்கான கிகாலி திருத்தமானது நிலையான குளிரூட்டலை ஊக்குவிக்கிறது மற்றும் குளிர்பதனப் பொருட்களின் பருவநிலை தாக்கத்தைக் குறைக்க உதவுகிறது.