இந்தத் தினமானது ஓவியக் கலையின் ஆற்றல், கலாச்சாரப் பன்முகத்தன்மை மற்றும் கலைஞர்களின் பங்களிப்புகளை போற்றும் வகையில் ஏப்ரல் 15 ஆம் தேதியன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது.
இந்தத் தேதியானது, லியொனார்டோ டாவின்சி அவர்களின் பிறந்த நாளினை நினைவு கூரும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.
இது முதல் முறையாக, 2012 ஆம் ஆண்டில் மெக்ஸிகோ நாட்டின் குவாடலஜாராவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் சர்வதேசக் கலைச் சங்கத்தினால் (IAA) தொடங்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Art for Unity and Healing" என்பதாகும்.