உலக கதிர்வரைவியல் மற்றும் கதிரியக்கவியல் தினம் 2025 - நவம்பர் 08
November 11 , 2025 71 days 79 0
சுகாதாரப் பராமரிப்பில் கதிரியக்கவியல் மற்றும் கதிரியக்கவியலாளர்களின் பங்கு குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை இந்நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் முதன்முதலில் 2007 ஆம் ஆண்டில் சர்வதேச கதிரியக்கவியலாளர்கள் மற்றும் கதிரியக்கத் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தால் கொண்டாடப்பட்டது.
இது 1895 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் தேதியன்று வில்ஹெல்ம் கான்ராட் ரோன்ட் ஜென் என்பவரால் X -கதிர்கள் கண்டறியப்பட்டதை நினைவு கூரும்.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Radiographers: Seeing the Unseen" என்பதாகும்.