TNPSC Thervupettagam

உலக கல்லீரல் அழற்சி தினம் 2026 - ஜூலை 28

July 28 , 2026 2 days 66 0
  • வைரஸ் ஹெபடைடிஸ்/வைரஸ் தொற்றால் ஏற்படும் கல்லீரல் அழற்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அதனைத் தடுத்தல், பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் முற்றிலுமாக ஒழிப்பதை ஊக்குவிப்பதையும் இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஹெபடைடிஸ் பி வைரஸைக் (HBV) கண்டுபிடித்து, அதற்கான முதல் நோயறிதல் பரிசோதனை மற்றும் தடுப்பூசியை உருவாக்கிய டாக்டர் பரூச் ப்ளம்பெர்க் அவர்களின் பிறந்த தினத்தில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • இது 2008 ஆம் ஆண்டில் உலக ஹெபடைடிஸ் கூட்டணியால் (WHA) முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் 2010 ஆம் ஆண்டில் உலக சுகாதார சபையால் (WHA) உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய சுகாதார தினமாக அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
  • ஹெபடைடிஸ் (கல்லீரல் அழற்சி) என்பது முக்கியமாக Hepatitis A, B, C, D, and E வைரஸ்களால் ஏற்படும் கல்லீரலின் வீக்கமாகும்.
  • தடுப்பூசி, பரிசோதனை மற்றும் சிகிச்சை மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் பொதுச் சுகாதார அச்சுறுத்தலாக விளங்கும் வைரஸ் ஹெபடைடிஸ்/வைரஸ் தொற்றால் ஏற்படும் கல்லீரல் அழற்சி முற்றிலுமாக ஒழிப்பதை உலக சுகாதார அமைப்பு (WHO) நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்