இந்த அறிக்கை உலகளாவிய காற்று ஆற்றல் ஆணையத்தினால் (GWEC - Global Wind Energy Council) வெளியிடப்பட்டது.
அடுத்த பத்தாண்டுகளில் மும்மடங்கு என்ற அளவிற்கு விரைவான புதிய காற்று ஆற்றல் திறனை நிறுவ வேண்டிய அவசியத்தைப் பற்றி இந்த அறிக்கை எச்சரித்து உள்ளது.
இது தொழிற்துறை வளர்ச்சிக்கு முந்தைய காலங்களில் இருந்ததை விட 2oCக்கும் அதிகமாக உலக வெப்பமயமாதலைக் குறைப்பதற்கும், உலகளாவிய காலநிலை இலக்குகளை அடைவதற்குமான ஒரு எச்சரிக்கையாகும்.
2020 ஆம் ஆண்டில் 93 GW திறன் கொண்ட புதிய காற்று ஆற்றல் உற்பத்தி திறனானது அமைக்கப் பட்டுள்ளது.
இது வருடத்திற்கு 53% அதிகரிப்பு ஆகும்.
ஆனால் 2050 ஆம் ஆண்டிற்குள் நிகர சுழிய உமிழ்வுகளின் வெளியீட்டினை 0% என்ற அளவிற்கு குறைத்தல் எனும் இலக்கிற்கு இது போதுமானதல்ல.
முடிவுகள்
இந்த அறிக்கையின்படி, மொத்த உலக காற்றாற்றல் திறனான 743 GW ஆனது ஒவ்வொரு வருடமும் 1.1 பில்லியன் டன்னுக்கும் மேலான கார்பன்டை ஆக்சைடு வெளியீட்டை குறைக்க உதவுகிறது.
இது தென் அமெரிக்காவின் வருடாந்திரக் கார்பன் வெளியீட்டிற்குச் சமமாகும்.
இந்த அறிக்கை வருடத்திற்கு குறைந்தபட்சம் 280 GW திறன் கொண்ட புதிய காற்று ஆற்றல் மையங்களை அமைப்பதற்கான தேவை உலகிற்கு உள்ளதாக எச்சரிக்கிறது.
உலகம் முழுவதுமுள்ள அரசுகள் அபாய நிலை (Red tape) மற்றும் திட்டமிடுதலில் ஏற்படும் தாமதங்கள் போன்றவற்றை ஒழிக்க காலநிலை அவசரம் (Climate Emergency) எனும் அணுகுமுறையை கையாள வேண்டுமெனவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
நிகர அளவில் சுழிய உமிழ்வின் நிலையை அடைதல் மற்றும் பசுமையான ஒரு மீட்சியினை ஊக்குவித்தல் போன்றவற்றிற்கு காற்று ஆற்றல் ஒரு மூலமாகும்.
ஏனெனில், காற்று ஆற்றல் விலை மலிவான மற்றும் ஒரு MWக்கு அதிகளவில் கரிம நீக்கத் திறனுடைய ஒரு ஆற்றல் மூலமாகும்.
இந்த அறிக்கையின் படி, கடந்த பத்தாண்டுகளில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மற்றும் சாதகமான பொருளாதார நிலைகள் (Economies of Scale) போன்றவை உலகளாவிய காற்று ஆற்றல் சந்தையின் அளவை நான்கு மடங்காக்கியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வளர்ச்சி சீனா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைக்கப்பட்ட பெரிய காற்று ஆற்றல் மையங்களால் ஏற்பட்டதாகும்.
இவை உலகின் இரு மிகப்பெரிய காற்று ஆற்றல் சந்தையாகத் திகழ்கின்றன.
இரு நாடுகளும் மொத்த காற்று ஆற்றல் திறனில் பாதிக்கு மேலான திறனைக் கொண்டுள்ளன.
அவை 2020 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட புதிய மையங்களில் 75% ஆகும்.