உலக கிஸ்வாஹிலி மொழி தினம் – ஜூலை 07
July 12 , 2022
1039 days
361
- யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள் முன்வைத்த ஒரு பிரகடனத்தைத் தொடர்ந்து இந்தத் தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டில் இத்தினமானது முதல்முறையாக அனுசரிக்கப்படுகிறது.
- இது 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற யுனெஸ்கோவின் 41வது அமர்வின் போது ஏற்றுக் கொள்ளப் பட்டது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘அமைதி மற்றும் செழுமைக்கான கிஸ்வாஹிலி’ என்பதாகும்.
- கிஸ்வாஹிலி மொழியானது ஆப்பிரிக்கா மற்றும் அதன் துணை-சஹாரா பகுதிகளில் பரவலாகப் பேசப்படுகிறது.
- ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கப்பட்ட ஒரே ஆப்பிரிக்க மொழி இதுவாகும்.
- ஐக்கிய நாடுகள் சபை, இவ்வாறு அங்கீகரித்த முதல் ஆப்பிரிக்க மொழியும் இதுவே ஆகும்.

Post Views:
361