இது அதன் சொந்த சர்வதேசத் தினத்தைப் பெற்ற முதல் ஆப்பிரிக்க மொழியாக 2022 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது.
கிஸ்வாஹிலி மொழியானது உலகளவில் சுமார் 200 மில்லியனுக்கும் மிக அதிகமான பேச்சாளர்களுடன் உலகளவில் தடம் பதித்துள்ளது.
1954 ஆம் ஆண்டு ஜூலை 07 ஆம் தேதியன்று, காலனித்துவ ஆட்சியில் இருந்து தனது சுதந்திரத்திற்காகப் போராடும் மக்களுக்கான ஒற்றுமையின் ஒரு முக்கிய மொழியாக கிஸ்வாஹிலி ஏற்றுக் கொள்ளப் பட்டது.