2026 ஆம் ஆண்டிற்கான தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற உலக குத்துச் சண்டை ஃபியூச்சர்ஸ் கோப்பைத் தொடரில் இந்தியாவின் சந்திரிகா பூஜாரி தங்கப் பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் மார்டோனோவா நசோகாட்டைத் தோற்கடித்து அவர் வெற்றி பெற்றார்.
இந்தியா இத்தொடரில் 1 தங்கம், 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்றது.
குஞ்சன் (பெண்கள் 48 கிலோ), ஜாயஸ்ரீ தேவி (பெண்கள் 54 கிலோ) மற்றும் எல். அம்பேகர் மீட்டி (ஆண்கள் 50 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
ராதாமணி லாங்ஜம் பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இளையோர் ஒலிம்பிக் எடைப் பிரிவுகளில் இளம் குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்ற இத்தொடர், செனகலின் டாக்கரில் நடைபெறவுள்ள 2026 கோடைகால இளையோர் ஒலிம்பிக் போட்டிக்கான ஆயத்தமாக அமைந்தது.