TNPSC Thervupettagam

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2025

September 19 , 2025 15 hrs 0 min 19 0
  • 2025 ஆம் ஆண்டு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் உட்பட நான்கு பதக்கங்களை வென்றது.
  • ஜெய்ஸ்மின் லம்போரியா மற்றும் மினாக்சி ஹூடா முறையே மகளிர் 57 கிலோ மற்றும் 48 கிலோ எடைப் பிரிவுகளில் தங்கம் வென்றனர்.
  • மகளிர் 80 கிலோவிற்கு மேலான எடைப் பிரிவில் நுபுர் ஷியோரன் வெள்ளி வென்றார்.
  • மகளிர் 80 கிலோ எடைப் பிரிவில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பூஜா ராணி வெண்கலம் வென்றார்.
  • கஜகஸ்தான் ஏழு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • 2025 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் இங்கிலாந்தின் லிவர்பூலில் உள்ள லிவர்பூல் அரங்கில் நடைபெற்றன.
  • உலக குத்துச்சண்டை அமைப்பால் நடத்தப்பட்ட இது, உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்களின் முதல் பதிப்பாகும்.
  • இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளும் இடம் பெற்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்