இத்தினமானது முதன்முதலில் பிரேசில் நாட்டில் 1999 ஆம் ஆண்டு பிரேசிலியக் குரல் தினமாக கொண்டாடப்பட்டது.
இந்தத் தினமானது, குரல் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காது, மூக்கு, தொண்டை (ENT) நிபுணர்கள், பேச்சு மொழி சார் தொடர்பு நோயியல் நிபுணர்கள் மற்றும் குரல் வல்லுநர்களால் தொடங்கப்பட்டது.
2002 ஆம் ஆண்டில், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்த முன்னெடுப்பில் இணைந்தனர் அதனையடுத்து இது அதிகாரப்பூர்வமாக உலக குரல் தினமாக அறிவிக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Empower Your Voice" என்பதாகும்.