உலக கேட்பொலிக் காட்சிக்கான பாரம்பரிய தினம் - அக்டோபர் 27
October 28 , 2018 2473 days 558 0
உலகம் முழுவதும் அக்டோபர் 27-ம் தேதி உலக கேட்பொலிக் காட்சிக்கான பாரம்பரிய தினம் அனுசரிக்கப்பட்டது.
இத்தினம் கேட்பொலிக் காட்சிக்கான ஆவணங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. மேலும் அந்த ஆவணங்களின் இழப்பைத் தடுக்கும் பொருட்டு அதனை எண்ணிலக்க அல்லது டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான அவசர நடவடிக்கைகளினுடைய தேவைகளின் அவசியம் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
2018ம் ஆண்டிற்கான உலக கோட்பொலிக் காட்சிக்கான பாரம்பரியத் தினத்தின் கருத்துரு - “உங்கள் நிலை முன்னேறுகின்றது” என்பதாகும்.
2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனம்/ UNESCO - United Nations Educational, Scientific and Cultural Organization) பொது மாநாடு அக்டோபர் 27-ம் தேதியை உலக கேட்பொலிக் காட்சிக்கான பாரம்பரிய தினமாக அறிவித்தது.