கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் அவற்றைத் தடுப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1897 ஆம் ஆண்டில் பெண் அனாபிலிஸ் கொசுக்கள் மலேரியா ஒட்டுண்ணிகளை மனிதர்களுக்குப் பரப்புகின்றன என்பதைக் கண்டுபிடித்த சர் ரொனால்ட் ரோஸை இந்த நாள் நினைவு கூறுகிறது.
சர் ரொனால்ட் ரோஸ், 1857 ஆம் ஆண்டில் இந்தியாவின் அல்மோராவில் பிறந்த ஒரு பிரிட்டிஷ்-இந்திய மருத்துவர் மற்றும் அறிவியலாளர் ஆவார்.
மலேரியா குறித்த அவரது பணிக்காக 1902 ஆம் ஆண்டில் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார், இதன் மூலம் மருத்துவத்தில் முதல் பிரிட்டிஷ் நோபல் பரிசு பெற்றவர் ஆனார்.
கொசுக்களால் பரவும் முக்கிய நோய்களில் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் ஜிகா வைரஸ் நோய் ஆகியவை அடங்கும்.
மலேரியா முக்கியமாக நோய்த்தொற்றுக்கு உள்ளான பெண் அனாபிலிஸ் கொசுக்களால் பரவுகிற அதே நேரத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா முக்கியமாக ஏடிஸ் கொசுக்களால் பரவுகின்றன.