ஐக்கிய நாடுகள் அமைப்பானது “உலக கோவிட்-19 தடுப்பூசித் திட்டம்” ஒன்றைத் தயாரிக்குமாறு ஜி20 நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இது உலகம் முழுவதும் உள்ள 10 செல்வந்த நாடுகள் உலக அளவில் 75% தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
உலகில் உள்ள 130 ஏழை நாடுகள் ஒரு தடுப்பூசி கூட இன்னும் பெறவில்லை.
உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் எனும் திட்டமானது ஏழை நாடுகளுக்கு 40 மில்லியன் என்ற அளவில் கொரானா வைரஸ் தடுப்பூசிக்காக ஃபிசர்-பயோன்டெக் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.