TNPSC Thervupettagam

உலக சிங்க தினம் 2025 - ஆகஸ்ட் 10

August 14 , 2025 10 days 36 0
  • வேகமாக குறைந்து வரும் சிங்கங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்கான அவசரத் தேவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • சிங்கங்கள் (பாந்தெரா லியோ) மிகவும் சமூக ஈடுபாடு கொண்ட பெரும் பூனை இனமாகும், அவை முதன்மையாக ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகளில் காணப் படுகின்றன.
  • ஆசிய சிங்கம் (பாந்தெரா லியோ பெர்சிகா) ஆப்பிரிக்க சிங்கத்தை விட சற்று சிறியது ஆகும்.
  • 16வது சிங்கங்கள் கணக்கெடுப்பின்படி (2025) 2015 ஆம் ஆண்டில் 523 ஆக இருந்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையானது 2025 ஆம் ஆண்டில் 891 ஆக அதிகரித்தது.
  • இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • ஆசியச் சிங்கங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சிங்கங்களின் வளங்காப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்