உலக சுகாதார அமைப்பானது (WHO), 2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியிடப் படும் உலகளாவிய சுகாதாரக் குறிகாட்டிகளின் தொகுப்பான 'உலக சுகாதார புள்ளிவிவர அறிக்கை 2026'-ஐ வெளியிட்டுள்ளது.
சுகாதாரம் தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) நோக்கிய முன்னேற்றம் சீரற்றதாகவும், 2030 ஆம் ஆண்டிற்கான இலக்குகளை அடைவதற்கு மிகவும் மெதுவாகவும் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
2010 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் எச்.ஐ.வி (HIV) தொற்றுகள், காசநோய் மற்றும் புறக்கணிக்கப் பட்ட வெப்பமண்டல நோய்களில் நீண்டகால வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதிலும், 2015 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய மலேரியா பாதிப்பு 8.5% அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 2 பில்லியன் மக்கள் மாசுகளை ஏற்படுத்தும் சமையல் எரிபொருட்களையும் தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் நிலவரப்படி, சுமார் 1.6 billion மக்கள் மருத்துவச் செலவுகளால் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அல்லது வறுமையில் வாழ்கின்றனர், அதே நேரத்தில் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் மருத்துவத்திற்காகத் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிடுவதால் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளனர்.