உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் சிறப்பு அங்கீகார விருது
June 3 , 2021 1524 days 664 0
மத்திய சுகாதார அமைச்சரான டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்களுக்கு உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் சிறப்பு அங்கீகார விருதானது வழங்கப் பட்டுள்ளது.
புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பாக அவர் ஆற்றிய சாதனைகளுக்காக இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.
மின்னணு சிகரெட்டுகள் மற்றும் குறை வெப்பநிலை புகையிலைப் பொருட்களை (heated tobacco products) தடை செய்வதற்காக 2019 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தேசியச் சட்டத்தில் டாக்டர். ஹர்ஷ் வர்தன் அவர்களின் தலைமை முக்கியமான ஒன்றாகும்.