உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய புற்றுநோய் நிலை அறிக்கை 2026
July 15 , 2026 12 days 222 0
உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது உலகளாவிய புற்றுநோய் நிலை அறிக்கை 2026-என்ற அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கையானது உலகளாவிய புற்றுநோய் பாதிப்பு, புற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் சுகாதார அமைப்பின் திறன் பற்றிய விரிவான மதிப்பீட்டை வழங்குகிறது.
புற்றுநோய் பராமரிப்பை மேம்படுத்துவதற்காக சிறந்த திறன்கள், சிறந்த பாதுகாப்புகள் மற்றும் சிறந்த மதிப்பு ஆகிய மூன்று உத்திசார் மாற்றங்களின் கீழ் ஏழு நடவடிக்கைகளை இது பரிந்துரைக்கிறது.
உலகளாவிய சுகாதாரக் காப்பீட்டில் (UHC) புற்றுநோய் கட்டுப்பாட்டை ஒருங்கிணைக்கவும், சுகாதாரப் பணியாளர்களை வலுப்படுத்தவும் மற்றும் தரமான புற்றுநோய் பராமரிப்புக்கான சமமான அணுகலை உறுதி செய்யவும் இந்த அறிக்கை அழைப்பு விடுக்கிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கொள்கைகளின் மையத்தில் வைப்பதன் மூலமும், புற்றுநோய் தடுப்பு, சிகிச்சை மற்றும் உயிர் பிழைப்பதில் உள்ள பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதன் மூலமும் ஒரு மக்கள் மைய அணுகுமுறையை இது வலியுறுத்துகிறது.