TNPSC Thervupettagam

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேற்றம்

January 26 , 2026 14 hrs 0 min 24 0
  • ஜனவரி 23, 2026 அன்று அமெரிக்கா சுமார் 260 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிலுவைத் தொகையை செலுத்தாமல், உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அதிகாரப் பூர்வமாக வெளியேறியது.
  • அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
  • உலக சுகாதார அமைப்பிற்கான அனைத்து நிதியுதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது மற்றும் WHO அலுவலகங்கள் மற்றும் அமைப்புகளில் இருந்து அதன் பணியாளர்களை திரும்பப் பெற்றுள்ளது.
  • 2022–2023 ஆம் காலக் கட்டத்தில் கிட்டத்தட்ட 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி, உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது.
  • 1948 ஆம் ஆண்டு அமெரிக்கக் காங்கிரஸின் தீர்மானத்தின் கீழ், உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற ஓராண்டு முன் அறிவிப்பு மற்றும் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்