ஜனவரி 23, 2026 அன்று அமெரிக்கா சுமார் 260 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிலுவைத் தொகையை செலுத்தாமல், உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அதிகாரப் பூர்வமாக வெளியேறியது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
உலக சுகாதார அமைப்பிற்கான அனைத்து நிதியுதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது மற்றும் WHO அலுவலகங்கள் மற்றும் அமைப்புகளில் இருந்து அதன் பணியாளர்களை திரும்பப் பெற்றுள்ளது.
2022–2023 ஆம் காலக் கட்டத்தில் கிட்டத்தட்ட 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி, உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது.
1948 ஆம் ஆண்டு அமெரிக்கக் காங்கிரஸின் தீர்மானத்தின் கீழ், உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற ஓராண்டு முன் அறிவிப்பு மற்றும் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும்.