உலக சுகாதார நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதர் மில்கா சிங்
August 13 , 2017 3082 days 1475 0
தென் கிழக்கு ஆசியப் பிராந்தியப் பகுதிகளில் , உடல் செயல்பாட்டை ஊக்குவிக்கும் நல்லெண்ணத் தூதராக மில்கா சிங்கை உலக சுகாதார நிறுவனம் நியமித்துள்ளது.
ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால் உண்டாகும் தொற்றா நோய்களை (Non-Communicable Diseases) கட்டுப்படுத்தவும் , தடுக்கவும் உலக சுகாதார நிறுவனம் திட்டங்களை வகுத்துள்ளது.
இத்திட்டமானது 2025 ஆம் ஆண்டுக்குள் போதிய உடல் உழைப்பின்மையை 10 சதவீதம் அளவும், தொற்றாத நோய் தாக்குதல்களை 25 சதவீதம் வரையும் குறைக்க முற்படுகிறது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இந்த திட்டத்தினை மில்காசிங் ஊக்குவிப்பார்.
மில்கா சிங் காமன்வெல்த் போட்டிகளிலும், ஆசியன் விளையாட்டுகளிலும் இந்தியாவுக்குப் பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளார். ‘பறக்கும் சீக்கியர்’ என்று அழைக்கப்படும் இவர் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றவர் ஆவார்.