உலக சுங்கவரி அமைப்பு – ஆசிய பசிபிக் பகுதிகளின் தலைமை (World Customs organization – WCO)
July 19 , 2018 2593 days 846 0
இந்தியா ஜூன் 2020 வரை இரண்டு ஆண்டு காலத்திற்கு ஆசிய பசிபிக் பகுதிகளின் உலக சுங்கவரி அமைப்பின் துணைத் தலைவராகியுள்ளது. (பிராந்தியத் தலைமை)
இந்த அமைப்பு உறுப்பினர் தகுதியினை ஆறு பகுதிகளில் பகிர்ந்தளித்துள்ளது. இந்த ஒவ்வொரு பகுதியும் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர்களால் WCO-ல் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.
WCO
WCO பெல்ஜியமில் உள்ள பிரசல்ஸை தலைமையிடமாகக் கொண்ட அரசுகளுக்கிடையேயான அமைப்பு ஆகும்.
சர்வதேச ஒத்திசைவு அமைப்பு (International Harmonized System - HS), பொருள்களின் பெயரிடுதல், சுங்க மதிப்பீடு மற்றும் தோற்ற விதிகள் மீதான உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organization – WTO) ஒப்பந்தங்களின் தொழில்நுட்ப அம்சங்களை நிர்வாகம் செய்தல் ஆகியவற்றை WCO நிர்வகிக்கிறது.
உலக வர்த்தகத்தில் தோராயமாக 98 சதவிகிதத்தில் உலகெங்கிலும் செயல்படும் 182 நாடுகளின் சுங்க நிர்வாகத்தினை WCO பிரதிநிதித்துவப்படுத்துகிறது.