ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் உலக சுங்க அமைப்பின் (World Customs Organization-WCO) 4 நாள் பிராந்தியக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூடுகையானது WCO-வின் துணைப் பொதுச் செயலாளர் ரிகார்டோ டிராவினே மற்றும் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத் துறை வாரியத்தின் தலைவரான S.ரமேஷ் ஆகியோரால் தலைமை தாங்கப்பட்டது.
இது ஆசியாவின் 33 உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளால் கலந்து கொள்ளப்பட்டது.
உலக சுங்க அமைப்பு
WCO ஆனது சுங்க நிர்வாகங்களின் செயல்திறன் மற்றும் ஆற்றலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசுகளுக்குகிடையேயான ஒரு சுயாதீனமான அமைப்பு ஆகும்.
இது 1952 ஆம் ஆண்டு சுங்கத் துறை கூட்டுறவு சங்கம் (CCC - Customs Co-operation Council) என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரசல்ஸில் உள்ளது.
இது சுங்கத் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கான தகுதியுடைய ஒரே சர்வதேச அமைப்பு ஆகும். இது சர்வதேச சுங்கத் துறை சமுதாயத்தின் குரல் எனவும் கருதப்படுகிறது.
இது உலக வர்த்தகத்தில் ஒட்டு மொத்தமாக சுமார் 98 சதவிகிதத்தை செயல்படுத்துகின்ற, உலகமெங்கிலும் உள்ள 182 சுங்கத் துறை நிர்வாகங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது.