TNPSC Thervupettagam

உலக சுனாமி விழிப்புணர்வு தினம் 2025 – நவம்பர் 05

November 8 , 2025 19 days 43 0
  • சுனாமி அபாயங்கள் மற்றும் முன் எச்சரிக்கை அமைப்புகள், தயார்நிலை மற்றும் சமூக மீள்தன்மை ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றிய உலகளாவிய விழிப்பு உணர்வை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த அனுசரிப்பு ஆனது 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப் பட்டது.
  • சுனாமிகள் மிகவும் அரிதானவை என்றாலும், இவை மாபெரும் அழிவை ஏற்படுத்தும் என்பதோடு கடந்த நூற்றாண்டில் உலகளவில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சுனாமியால் உயிரிழந்துள்ளனர்.
  • நவம்பர் 05 ஆம் தேதியானது, ஒரு விவசாயி சுனாமி நெருங்கி வருவதைப் பற்றி எச்சரித்து கிராம மக்களைக் காப்பாற்றியதாகக் கூறப்படும் "இனாமுரா-நோ-ஹி" (The Burning of the Rice Sheaves-நெற்கதிர்களை எரித்தல்) என்ற ஒரு ஜப்பானியக் கதை மூலம் ஈர்க்கப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Be Tsunami Ready: Invest in Tsunami Preparedness" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்